நித்தியானந்தாவை வச்சி செய்யும் இணையவாசிகள்! ஊடகங்களையே பதறவைக்கும் காமெடி!
- குற்ற வழக்கில் நித்தியானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர்.
- சமுக வலைத்தளங்களில் நித்தியானந்தா குறித்த பேச்சு வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் அதிகம் வரும் மீம்ஸ் மற்றும் நகைச்சுவைக்கு நித்தியானந்தா பயன்படுத்தப்பட்டு வருகிறார்.அதற்கு காரணம் கைலாஸா என்ற தீவு ஒன்றை உருவாக்கி வருவதாக கூறினார்.ஆனால் இதற்கு இடையில் அவர் மீது பல்வேரு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு போலீசார் அவரோடு தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு போன் செய்து, நான் நித்தியானந்தாவின் கூட்டத்தில் முன்பு இருந்தவர்,இந்திய அளவில் குற்றவாளி என மக்களால் கருதப்படும் ஒருவர் தவறானவர், கொலை செய்தவர் வேறொருவர் என கூறியுள்ளார்.
அந்த செய்தியாளரும் யார் என தீர்க்கமாக கேட்டதற்கு, மீண்டும் குற்றவாளி வேறொருவர் என கூறியுள்ளார். அதன் பின்பு ஒன்றுமில்லை பாகுபலியை கட்டப்பா தான் கொன்றார் என அனைவரும் நினைக்கின்றனர் ஆனால், அப்படியல்ல கொன்றது நித்தியானந்தா என கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.ஏற்கனவே நித்தியானந்தா பேசும் பேச்சிற்கு அவரை கலாய்த்து வருகின்றனர்.