சிறுமி மீது காபியை கொட்டியதால் ரூ.7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க -நீதிமன்றம் உத்தரவு .!
- விமானத்தில் உள்ள விமான பணியாளர் பெண் பயணம் செய்த சிறுமி தொடையில் காபி கொட்டி உள்ளார்.
- இந்த வழக்கில் நீதிபதி பயணிகளுக்கு சேவை செய்யும் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பு விமான நிறுவனம் தான் என கூறினார்.
ஸ்பெயினின் மல்லோர்காவிலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள வியன்னாவிற்கு 6 வயது சிறுமி தனது தந்தையுடன் சென்று உள்ளார். அப்போது விமானத்தில் அந்த சிறுமிக்கு காபி கொடுக்கப்பட்டது.
விமானத்தில் உள்ள விமான பணியாளர் பெண் சிறுமிக்கு காபி கொடுக்கப்போகும் போது எதிர்பாராதவிதமாக சிறுமியின் தொடையில் காபி கொட்டியது. இதனால் சிறுமிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் தரப்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் அந்த விமான நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் விமானம் நிறுவனம் தரப்பில் காபி கொட்டியதற்கு பொறுப்பேற்க முடியாது என கூறியது. விமானத் அதிர்வினால் கூட காபி கொண்டிருக்கலாமே என விமான தரப்பில் கூறப்பட்டது.
இறுதியாக நீதிபதி பயணிகளுக்கு சேவை செய்யும் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பு விமான நிறுவனம் தான் என கூறினார். மேலும் காயம் பட்ட அந்த சிறுமிக்கு ரூ.7 லட்சம் ரூபாய் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட்டது.