அம்மா ஸ்கூட்டர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
வரும் 10-ஆம் தேதி வரை பணிக்கு செல்லும் பெண்கள் இருசக்கரம் வாங்குவதற்கான மானியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி பணிக்கு செல்லும் பெண்களுக்கு முதற்கட்ட இருசக்கர மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருசக்கர வாகன மானியத்துக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் நேற்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்கும் போது பிறப்பு, இருப்பிடம், சாதி மற்றும் வருமானச் சான்றுகள், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அட்டை, வேலைவழங்கும் நிறுவனத்தின் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றுகள் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததது.
நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தாங்கள் வேலைக்குச் செல்வதால் ஆவணங்களை தயார் செய்ய தங்களுக்கு போதிய கால அவகாசம் இல்லை என்றும், காலநீட்டிப்பு வழங்குமாறும் பல்வேறு பெண்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து இருசக்கர மானியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 10-ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் ஏற்கும் பட்சத்தில் அப்பெண்கள் ஸ்கூட்டர் வாங்க தமிழக அரசு சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.