அமெரிக்க பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சி !
நேற்று வர்த்தக நேரத் தொடக்கத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
அமெரிக்காவின் பங்குசந்தை 30 முன்னணி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் டோ ஜோன்ஸ், ஆயிரத்து 600 புள்ளிகள் வரை சரிந்தது. இதேபோல் கடந்த 2011ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் கடனில் சிக்கித் தவித்தபோது அதன் பாதிப்பு அமெரிக்க சந்தையிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் கடந்த 7 ஆண்டுகளில் முதன்முறையாக முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக நேரம் செல்லச் செல்ல 1175 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தையிலும் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியுள்ளது.பட்ஜெட் அறிவித்த நாள் முதலே இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.