இலங்கையில் அஜித்திற்கு எவ்வளவு பெரிய ரசிகரா.? உறைந்து போன நடிகை காயத்ரி.!
- நடிகை காயத்ரி சீனுசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் “மாமனிதன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இலங்கையில் அவர் சென்ற ஆட்டோ முழுவதும் நடிகர் அஜித் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்த காயத்ரி ஆச்சரியம் அடைந்து உள்ளார்.
நடிகை காயத்ரி “நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது இயக்குனர் சீனுசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை காயத்ரி இலங்கையில் உள்ள கொழும்பு சென்று உள்ளார்.அங்கு அவர் வேலையை முடித்து விட்டு பின்னர் ஆட்டோவில் சென்று உள்ளார்.அப்போது அவர் ஏறிய ஆட்டோவில் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது . அது என்னவென்றால் அந்த ஆட்டோ முழுவதும் நடிகர்அஜித் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.அதை பார்த்த காயத்ரி ஆச்சரியம் அடைந்து உள்ளார்.
இலங்கை நாட்டிலும் நடிகர் அஜித்திற்கு எவ்வளவு பெரிய ரசிகரா.? என ஆச்சரியம் அடைந்தார்.பின்னர் அந்த ஆக்டோவில் இருந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.