எங்கள் மீது தாக்குதல் வேண்டாம்.! போலீஸ்க்கு பூ கொடுத்த மாணவி.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

  • குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதா நாடு முழுவது கலவர களமாக இருக்கிறது. இதன் விளைவாக, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியின் பல இடங்களில் 144 தடைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • டெல்லியில் நடந்த மாணவர்  போராட்டத்தில் ஒரு போலீஸ்காரருக்கு ரோஜா பூவை கொடுத்து எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் உரிமைக்காக போராடுகிறோம் என கூறிய ஒரு மாணவி.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறியுள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் அவர்கள் மீது தடியடி நடத்தியும், போராட்டத்தை அவர்கள் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமானோர் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா என்ற பல்கலை கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் தொடர் போராட்டம் காரணமாக கர்நாடக, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் சில பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்ட களத்தில் இருந்த ஒரு மாணவி அனைவரையும் கவரும் வகையில் ஒரு நிகழ்வை செய்தார். அது என்னவென்றால் போராட்டத்தில் போலீசார்கள் தடியடி அடித்ததால் அந்த மாணவி எங்கள் உரிமைக்காக அமைதியான நிலையில் தான் போராடுகிறோம், எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்பதை உணர்த்தும் விதமாக அந்த பெண்ணை தாக்க வந்த போலீசாருக்கு ஒரு ரோஜா பூவை கொடுத்து மனதால் கட்டிப்போட்டார். இச்சம்பவத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.