எலுமிச்சை சாறை விட தோலில் இவ்வளவு நன்மையா..?

Default Image

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் எலுமிச்சை பழமும் ஒன்று. இதில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது. இதில் ஊட்டச் சத்துகளும் அதிகம் உள்ளது. ஒரு கப் எலுமிச்சைச் சாற்றில் 50 கிராம் விட்டமின் சி உள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம் இரும்புச் சத்துக்களும் உள்ளன.

இது மட்டுமல்லாமல் நாம் வேண்டாம் என தூக்கி எறியும் எலுமிச்சை தோலில் ஏராளமான நன்மைகள் உண்டு எலுமிச்சைச்சாறை விட தோலில் அதிக நன்மைகள் உள்ளது. தோல்  வேகவைத்து நீரை குடித்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

தேவையான பொருள்கள்:

எலுமிச்சை -6

தண்ணீர் அரை லிட்டர்

தேன் தேவையான அளவு

செய்முறை:

முதலில் எலுமிச்சம் பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும் அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க  கொதிக்கவைத்து இறக்கவும். பின்னர் அதனுடன் தேன் கலந்து குடிக்கவும்.

நன்மைகள்:

இதை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் நோய்எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். மிகவும் ஆற்றலுடன் , சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை சரியாகும்.

தினமும் இதை குடித்து வந்தால் உடலில் உள்ள மூலைமுடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாக இருக்கும்.

இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்