வரலாற்றில் இன்று (டிசம்பர் 20) சர்வதேச ஒருமைப்பாடு தினம் இன்று.

Default Image
  • உலக ஒற்றுமையை நிலைநிறுத்துவதில் ஓங்கி ஒலிக்கும் ஐநா.
  • வரலாற்றில் இன்று சர்வதேச ஒருமைப்படு நாள்.

சர்வதேச நாடுகளின் ஒருங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை திகழ்கிறது. இந்த சபையின் பொதுச்சபையில் கடந்த  2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் நாள்  உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். இந்த,  21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்பட இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த  சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தன்று,  உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதற்குமாக நிகழ்ச்சிகள் இந்த நாளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் இந்த நாளின் மூலம்  மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்