இரண்டு விதமான தேதிகள்! விதவிதமான உணவுகள்! சுவாரஸ்யம் நிறைந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

Default Image
  • கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகம் முழுக்க டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • ஜூலியன் காலண்டரின் படி ஜனவரி 7ஆம் தேதியும் சில இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுக்க டிசம்பர் 25இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கொண்டாடப்படுகையில், சில கிரேக்க பகுதிகளில் ஜூலியன் காலாண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனவரி 7ஆம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக சில கத்தோலிக்க தேவாலயத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் கிறித்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தற்போதே கேக், கிருஸ்துமஸ் மரங்கள் குடில் என கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். ஒவ்வோர் பகுதியிலும் அந்தந்த பகுதிகளின் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்படுவது வழக்கம்.

போலந்து நாட்டில் விகிலா  எனும் உணவு கிறிஸ்துமஸ் உணவு தயாரிக்கப்படுகிறது. இதன் அர்த்தம் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் எனப்தற்காகவாம். இத்தாலியில் 7 வகை மீன்கள், பயிறு சாப்பிடுவார்களாம். அப்படி செய்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்பானிஷ் நாட்டில் முட்டை, பாதாம், சர்க்கரை, தேன் கலந்து டூர்ரூன் என்கிற உணவு தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தயாரிக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பெரும்பாலான வீடுகளில் தயாரிக்கப்படுவது பிளம் கேக், வான்கோழி மாமிசம், ஜெல்லி புட்டு ஆகிய உணவுகள் மிக பிரபலம் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்