அமைச்சர் செல்லூர் ராஜூ உறுப்பினர் அட்டை விவகாரம் குறித்து விளக்கம் !
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உறுப்பினர் அட்டை இருந்தால் தான் அரசு நலத்திட்ட உதவிகள் என்று தாம் கூறவில்லை என தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் முனியாண்டிபுரத்தில் அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக உறுப்பினர்கள் அதற்கான அட்டை இருந்தால் தான் கட்சியிலோ, அரசிலோ உதவியை நாட முடியும் என்று தாம் கூறியதை திரித்து பரப்பி விட்டதாக குறை கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.