ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.! ‘பேஸ்புக்கிடம்’ இருந்து தப்பவே முடியாது.!

Default Image
  • இருப்பிடத்தை அறிந்து கொள்ள விரும்பாத பயனர்களின் இருப்பிடத்தையும் கூட தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
  • இதுமட்டுமில்லாமல் ஐபி முகவரி வாயிலாகவும் இருப்பிடத்தை அறிய முடியும் என்று கூறியுள்ளது.

பேஸ்புக்கிடம் தன்னுடைய இருப்பிடத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை என்ற தேர்வினை ஒரு பயனர் தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட அவரின் இருப்பிடத்தை தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்க செனட்டர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு செனட்டர்களால் தகவல் கேட்கப்பட்ட நிலையில் பேஸ்புக் நிறுவனம் அக்கடிதத்தை எழுதியதாக கூறப்படுகிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் கடிதத்தை பார்க்க இதைத் தொடவும்.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் செனட்டர்களுக்கு எழுதிய கடிதமும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் பயனர்களின் இருப்பிடம் குறித்த விவரம் தெரிவதால் அருகாமையில் இருக்கும் வணிக நிறுவனங்கள் குறித்த தகவல்களை பயனர்களுடன் பகிர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் பயன்படுத்தும் ஒருவர் தனது இருப்பிடத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை என்றாலும் கூட கடைகள் அல்லது ஒரு இடத்தில் இருப்பதாக நண்பர்களால் டேக் செய்வதன் மூலமோ அல்லது பேஸ்புக்கின் ஷாப்பிங் பிரிவு மூலம், பின்னர் ஷாப்பிங் செய்யும் போது ஒரு முகவரியை கொடுத்தால் அதன் மூலம் பயன்படுத்துவோரின் இருப்பிடத்தை தெரிந்துக்கொள்ள முடியும், என்று பேஸ்புக் விளக்கமளித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஐபி முகவரியை  வைத்து கூட இருப்பிடத்தை அறிய முடியும் என்று கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்