அமெரிக்காவின் சாதனையை முறியடித்த ரஷ்யா!
நாசாவின் சாதனையை ஸ்பேஸ் வாக்(Space Walk) என்ற நிகழ்வில் ரஷ்ய வீரர்கள் முறியடித்தனர்.
விண்வெளி நிலையத்துக்கு வெளியே வீரர்கள் செயல்படும் நிகழ்வு ஸ்பேஸ் வாக் என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி நிலைய சரிபார்ப்புப் பணிக்காக நிலையத்தில் இருந்து வெளியேறும் வீரர்கள், விண்வெளி நிலையத்தில் தங்களை இணைத்தபடி பணி செய்வர்.
இதில் எவ்வளவு நேரம் வீரர்கள் வெளியே உள்ளனர் என்பதைக் கணக்கிட்டு ஸ்பேஸ் வாக் சாதனை மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களான அலெக்ஸாண்டர் மிசுர்கின் ((Alexander Misurkin)) மற்றும் ஆண்டன் ஸ்காப்லெரோவ் ((Anton Shkaplerov)) ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக் கிழமை அன்று தங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறி 8 மணி நேரம், 13 நிமிடங்கள் ஸ்பேஸ் வாக் நிகழ்வில் ஈடுபட்டனர். இதன் மூலம் 8 மணிநேரம் 7 நிமிடம் என்ற நாசாவின் முந்தைய ஸ்பேஸ் வாக் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.