மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடிக்க உ.பி அரசு முடிவு.!

Default Image
  • தேசிய கங்கை நதி ஆணையத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
  • படகு பயணத்தில் கங்கையை ஆய்வு செய்து விட்டு மோடி திரும்பிய போது படி ஏறுகையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

கடந்த வாரம் உ.பி மாநிலத்தில் உள்ள கான்பூரில் தேசிய கங்கை நதி ஆணையத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு படகு பயணத்தில் கங்கையை ஆய்வு செய்து விட்டு மோடி திரும்பிய போது படி ஏறுகையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

பின்னர் அங்கு இருந்த  எஸ்.பி.ஜி வீரர்கள் மோடியை தாங்கி பிடித்தனர். மோடி கீழே விழுந்ததில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் அங்கு இருந்த ஒரு படிக்கட்டின் உயரம் மட்டும் சற்று உயரமாக இருப்பதால் அந்த படி கட்டை இடித்துக்கட்ட உ.பி அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அம்மண்டல கமிஷனர் பாப்டே கூறுகையில், “பிரதமர் மோடி தடுமாறி விழுந்த படிக்கட்டின் உயரம் மட்டும் சற்று அதிகமாக இருந்தது. விரைவில் அந்த படிக்கட்டை இடித்து விட்டு மற்ற படிக்கட்டு அளவிற்கு இணையாக கட்ட உள்ளதாக கூறினார்.இதற்கு முன்பும்  சில பேர்  அந்த படியில் தடுமாறி விழுந்துள்ளனர்”என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்