நீதிபதி முன்பே சரமாரியாக சுட்டு கொல்லப்பட்ட கொலை குற்றவாளி ! 18 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்!

Default Image
  • உத்திரபிரதேச நீதிமன்றத்தில் மாஜிஸ்ரேட் முன்பு கொலை குற்றவாளியை 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. 
  • கொலையானவரின் மகன் பழிவாங்கும் நோக்கில் இச்சம்பவத்தை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் 6 மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் அதிபர் இஷான் மற்றும் இஷானுக்கு நெருக்கமானவர் இருவரையும் ஒரு கும்பல் கொலை செய்தது. இந்த இரட்டை கொலையில் நைவாஸ் மற்றும் ஜாபர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் விசாரணைக்கு பின்னர் இரண்டு நாள் முன்னதாக பிஜினார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மாஜிஸ்ரேட் முன்பே அவர்கள் இருவரையும் 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக சுட்டது. அதில் நைவாஸ் இறந்துவிட்டார். ஜாபர் மற்றும் சில போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக இறந்துபோன ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் தான் இந்த வெறிச்செயலை செய்தது விசாரணையில் அம்பலமானது. அதன் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெறும் அளவிற்கு அஜாக்கிரதையாக இருந்த போலீஸ்காரர்கள் 18 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்