7 வயதில் மேயரான குழந்தை சார்லி!அவருடைய அரசியல் முழக்கம்!
- அமெரிக்க கௌரவ மேயர் பதவியில் அமர்ந்த 7 வயது குழந்தை சார்லி.அவருடைய வளர்ப்பு தாயார் கூறிய அவரின் அரசியல் முழக்கம்.
- வரலாற்றிலேயே மிக குறைந்த வயது மேயர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வொய்ட் ஹால் நகரின் தீயணைப்புத் துறையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேயர் பதவி ஏலத்தில் விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த ஆக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட அதற்கான ஏலத்தில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் எனும் 7 மாதக் குழந்தை கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் தனது கௌரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.மேலும் மேயர் சார்லி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
மேலும் பதவியேற்பு விழாவில் மேயர் சார்லி சார்பாக ஃபிராங்க் என்பவர் பேசியுள்ளார்.அவர் கூறியதாவது வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ஆகிய நான் மேயர் பதவியை உளமாற ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த மேயர் பதவிக்கு உண்மையாக இருப்பேன்.விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும் கனிவாகவும் அன்போடும் இருப்பேன்.தீயணைப்பு வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்து செல்வேன்.எனது நாட்டை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.
மேலும் இவ்வாறு நான் செய்ய எனக்கு அம்மாவும் அப்பாவும் உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் மேயர் சார்லியின் வளர்ப்பு தாய் நேன்சி மேயர் சார்லி அனைவரையும் எந்தவித பாகுபாடுமின்றி நேசிப்பார்.அனைவரின் ஒற்றுமைக்காக உழைப்பார்.
மேலும் மேக் அமெரிக்கா கைன்ட் அகைன்’ என்பதே அவருடைய அரசியல் முழக்கம்”என்று கூறியுள்ளார்.இந்நிலையில் அமெரிக்க வரலாற்றிலேயே 7 வயதில் மேயர் ஆன குழந்தை என என்ற பெயரை சார்லி பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.