குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிர்ப்பு- திமுக கூட்டணி கட்சிகள் பேரணி
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
- குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் பேரணி நடைபெறும்.
மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதவை கொண்டு வந்த நிலையில் இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தலைவர்கள் முத்தரசன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் பேரணி நடத்தப்படும்.குடியுரிமை சட்டத்தில் இருந்து இலங்கை தமிழர்களும் ,இஸ்லாமியர்களும் ஏன் விடுபட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார்.இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் .மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பேரணியில் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.