குடியுரிமை சட்டம் -மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதவை கொண்டு வந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தலைவர்கள் முத்தரசன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.