கிறிஸ்துமஸ் மரம் – தோன்றிய வரலாறு என்ன ?

Default Image
  • கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
  • கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் மரம் அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தப்படும். 

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் வீடுகளில் செய்யப்படும்.இதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கிறிஸ்துமஸ் மரம் ஆகும்.கிறிஸ்துமஸ் மரத்தின் வரலாறு குறித்து பார்ப்போம் …

பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்ற நம்பிக்கை  மிகவும் ஆழமாக இருந்தது.கிறிஸ்துமஸ் தினத்தின் சிறப்புகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுகிறது ஜெர்மனி. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் புனித போனிபேஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது மக்கள் அங்குள்ள ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அதைக்கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு கிறிஸ்மஸ் மரம் முளைத்து வளர்ந்ததாக கூறப்படும் கதையே கிறிஸ்துமஸ் மரத்தைக் குறித்து பெரும்பாலான மக்களால் சொல்லப்படும் கதை. அந்த மரம் முளைத்த செயலை இயேசுவின் உயிர்ப்போடு தொடர்பு படுத்தி தன்னுடைய கிறிஸ்தவ போதனையை மும்முரப்படுத்தினார் அவர். ஆனாலும் அந்த மரம் அப்போதெல்லாம் அலங்காரப் பொருளாகவோ, கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படவோ இல்லை.

ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்மஸ் மரத்தை முதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள். 12-ஆம்  நூற்றாண்டுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டது.சுமார் 1500-ஆம்  ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் ஒரு கிறிஸ்துமஸ் கால பனி நாளில் பனி படந்த சாலை வழியாக நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது படந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்கவைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார்.உடனே ஒரு ஃபிர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதை கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார்.கிறிஸ்துமஸ் மரம் அலங்காரங்களுடன்,கிறிஸ்துமஸ் விழாக்களில் நுழைந்தது இந்த சமயத்தில் தான்.

1521-ஆம் ஆண்டு பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை பாரீஸ் நகருக்குக் கொண்டுவந்து விழா கொண்டாடியதே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது.18-ஆம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் வெகுவாகப் பரவியது. நாளடைவில் உலகம் முழுவதும் பரவி தற்போது கிறிஸ்மஸ் என்றாலே கிறிஸ்மஸ் மரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் பரவியுள்ளது…

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்