2-வது ஒருநாள் போட்டி..! இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா இந்தியா.?
- வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாட உள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று இரண்டாம் போட்டி நடைபெற உள்ளதால் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். அதே நேரத்தில் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் போட்டி சமனில் முடியும் .நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்தால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாட உள்ளனர்.