பெண்களுக்கு சம உரிமை அளிப்பதில் இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முன்னேறியது வங்கதேசம்…!
பெண்களுக்கு சம உரிமை அதாவது பெண்ணுரிமை அளிப்பதில் உலக அளவில் நமது இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் இந்த பிஜேபியின் ஆட்சியில் அது மேலும் 21 இடங்கள் பின்னுக்கு சரிந்து 108வது இடத்தை பெற்றுள்ளது.இது மிகவும் கவலை அடையக்கூடிய ஒரு விசையமாக மாறிக்கொண்டிருகிறது.ஏனெனில் இந்திய பெண்கள் அனைவரும் வீட்டோடு இருந்து சமைத்து மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் போதும் என்று ஆர்.எஸ்.எஸ் . தலைவர் மோகன் பகவத் கூறியதது தான் எங்களது நினைவில் வருகிறது.ஆனால் இஸ்லாமிய நாடான பங்களாதேஷ் இந்தியாவைக் காட்டிலும் பல இடங்கள் முன்னேறியுள்ளது.