சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறாரா?! தயாரிப்பாளர் யார் தெரியுமா?
- சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சூரரை போற்று.
- சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது இப்படத்திற்கான ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது.
சூரரை போற்று திரைப்படத்திற்கு அடுத்ததாக சூர்யாவின் 39வது திரைப்படம் ஆகவே சிறுத்தை சிவா இயக்கும் புதிய படம் உருவாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் சிறுத்தை சிவா தற்போது ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்கி வருவதால், சூர்யா மற்ற இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
அதில் தற்போது இயக்குனர் ஏறக்குறைய முடிவாகிவிட்டார் என கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள திரைப்படம் விரைவில் உருவாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்தப்படமும் ஒரு நாவலை மையப்படுத்திதான் கதை எழுதப்பட்டுள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.