வம்புக்கு இழுத்த பாகிஸ்தான்…!!! பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவு துறை..!!! நீங்கள் பொய்களை அள்ளி வீசும் ஒருவர் என கடுமையாக சாடல்…!!!

Default Image
  • இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட தேசிய  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்திற்கு பதிலடி.
  • இதுகுறித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் தக்க பதிலடி.

இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட தேசிய  குடியுரிமை திருத்த சட்டம்  அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தளுக்கு ஆளாகி,கடந்த  2014ம் ஆண்டு வரை இந்தியாவிற்குள் அடைக்கலம்  புகுந்த இஸ்லாமியர்கள்  அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்டம்  வழி வகை செய்துள்ளது. இந்த தேசிய  குடியுரிமை திருத்த மசோதா இந்திய  நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த  போது, நமது அண்டை நாடான பாகிஸ்தானின்  பிரதமர் இம்ரான் கான் சார்பில் இதற்க்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த விவகாரத்தில், இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் இந்திய பிரதமர்  மோடி அரசை விமர்சித்து கடுமையாக பதிவிட்டார்.

Image result for imran khan

இந்நிலையில்  இதுகுறித்து,  இந்திய வெளியுறவு  அமைச்சகம் சார்பில்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்தியாவின்  உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒரு முறை பல்வேறு தரப்பினரும் கூடியுள்ள இடத்தில்  பொய்களை பேசியுள்ளார்இதில் இருந்து அவர்  உலக அரங்குகளை இதுபோன்று தவறாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்பது உலகம் முழுவதற்கும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.நமது அண்டை நாடான  பாகிஸ்தானின், கடந்த 72 வருடங்களில், தனது நாட்டில் வசித்து வந்த சிறுபான்மையின மக்களை திட்டமிட்டு  இந்தியாவிற்கு செல்ல  பாகிஸ்தான் கட்டாயப்படுத்தியது.  கடந்த 1971ம் ஆண்டு அந்நாட்டு ராணுவம் கிழக்கு பாகிஸ்தானிய மக்களை என்ன செய்தது என்பதனை  எவரும் மறக்க மாட்டார், ஆனால் இம்ரான் கான் அந்த நிகழ்வை மறக்க வேண்டும்  விரும்புகிறார்.அந்நாட்டு அரசு தனது சொந்த சிறுபான்மையின மக்கள் மற்றும் சக மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்து உள்ளது.  இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்