குடியுரிமை சட்டம் – இன்று அனைத்து கட்சி கூட்டம்
- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதவை கொண்டு வந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது.நேற்று
நேற்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.