தமிழகத்தில் டிரண்டாகி மறந்த மூலப்பத்திர விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்…!!!
- சென்ற வாரம் வரை திமுக முரசொலி அலுவலகம் இருந்த இடம் குறித்த சர்ச்சை பலமாகவே இருந்தது.
- இந்நிலையில் தமிழக மக்கள் மறந்த இந்த செய்தியை தற்போது தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தற்போது மீண்டும் தனது நோட்டிஸ் மூலம் நினைவுபடுத்தியுள்ளது.
திமுக முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதன்முதலில் ஒரு புகார் ஒன்றை கூறினார். இந்த புகாரையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக தமிழகத்தில் வெடித்தது. மேலும், இதுதொடர்பான விசாரணை சென்னையில் நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அந்த கட்சியின் அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரான ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி அவரது தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதுபோலவே பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் மாநில செயலாளர் சீனிவாசன் ஆஜரானார். பலரும் மறந்த இந்த விவகாரத்தில் தற்போது மீண்டும் இவ்விவகாரம் தலைதூக்கியுள்ளது.இந்நிலையில் இந்த, பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ஆணையம் அனுப்பிய நோட்டீஸில் இந்த பஞ்சமி நில விவகார புகார் தொடர்பாக வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.