போலீசார் நடத்திய தாக்குதல் எதிர்த்து மேலாடை இன்றி பேரணியாக சென்ற மாணவர்கள்.!
- போலீசார் நேற்று முன்தினம் மிருகத்தனமாக தாக்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதனால் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மேலாடை இன்றி பேரணியாக சென்றுள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதனால் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் ஆரம்பித்து தற்போது பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கையை வலியுறுத்திக் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மேலாடை இன்றி பேரணியாக சென்றுள்ளனர்.
மேலும் போலீசார் மிருகத்தனமாக தாக்கியது. தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கையில் இந்திய கொடியுடன் மத்திய அரசாங்கம் மற்றும் டெல்லி போலீசாருக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர்.
நேற்றுமுன்தினம் வன்முறையில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு 50 மாணவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். டெல்லி மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை கண்டித்தும் , புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.