வரலாற்றில் இன்று (17-12-2019) : ஓய்வூதிய நாள்!

Default Image
  • வருடா வருடம் இன்றைய தினம் ஓய்வூதிய தினமாக கொண்டாடப்படுகிறது.
  •  17-12-1982இல் உச்சநீதிமன்றம் ஓய்வூதியம் குறித்து தீர்ப்பளித்தது. 

1982ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றமானது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பை நீதிபதி D.S.நகரா வழங்கினார். அதாவது அரசு துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் பணி நிறைவு பெற்ற பின் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது உறுதிசெய்யப்பட்டது. அதிலும் எந்தவித பிரிவின் கீழ் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சமமான ஓய்வூதியத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வு கால நிலை குறித்து பல்வேறு ஓய்வுதிய சங்கங்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டது. வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அந்த தீர்ப்பானது இதே டிசம்பர் 17ஆம் தேதி 1982 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

ஓய்வூதியம் என்பது ஊழியர்கள்  உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு மொத்தமாக கொடுக்கப்படும் ஊதியம் ஆகும். அரசியல் சட்டப்பிரிவு 139 மற்றும் 145 (5)-ன் படி ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு ஊதியமானது சொத்துரிமை போன்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17ம் தேதி ஓய்வூதியர் நாள் என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்