கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்!
- சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பொறியியல் மாணவியை ஆட்டோ ஓட்டுநர் கடத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
- 5 நாட்கள் மாணவியை கடத்தி வைத்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.இந்நிலையில் அந்த மாணவி கடந்த 10-ம் தேதி கல்லூரியில் இருந்து வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவி தொடர்பான விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு மாணவியை ரமேஷ் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.பின்னர் உறவினரின் வீட்டில் பதுங்கி இருந்த ரமேஷ் குமாரை காவல்துறையினர் வளைத்து பிடித்துள்ளனர்.
பின்னர் மாணவியை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது ரமேஷ் குமார் மாணவியை ஐந்து நாட்கள் வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ் குமார் ,பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.