அதிர்ச்சி செய்தி !வாடிக்கையாளர் ஒரு ரூபாய் குறைவாக கொடுத்ததால் கொலை ….
ஏற்பட்ட வாய்த்தகராறில் வாடிக்கையாளர் அடித்துக் கொலை. மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கடைக்காரரிடம் ஒரு ரூபாய் குறைவாக கொடுத்ததால் அடித்துக் கொல்லப்பட்டார்.
கல்யாண் டவுனைச் சேர்ந்த 54 வயதான மனோகர் கேம்னே என்பவர், முட்டை வாங்குவதற்காக ராம்பாக் (rambaugh) பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். முட்டைகளை வாங்கி விட்டு ஒரு ரூபாய் குறைவாக கொடுக்கவே, மனோகரை கடைக்காரர் சரமாரியாக திட்டியுள்ளார். இதை அடுத்து தமது மகன்களுடன் கடைக்குச் சென்ற மனோகர், கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றவே கடைக்காரரின் மகன் சுத்கார் பிரபு, மனோகரை கடுமையாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மனோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சுத்கர் பிரபு மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.