தேசத்தின் ஆன்மாவான இளையதலைமுறை மீது தாக்குதல் -பிரியங்கா காந்தி
- மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
- தேசத்தின் ஆன்மாவான இளையதலைமுறை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்தியா கேட் முன்பு குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் ,ஜாமியா பலகலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், தேசத்தின் ஆன்மாவான இளையதலைமுறை மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. தங்களின் உரிமைகளுக்காக போராடுவோரை வெளியே இழுத்து வந்து தாக்கியது கண்டனத்திற்குரியது .காங்கிரஸ் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், மாணவர்களுக்கு உறுதுணையாகவும் நிற்கும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.