குடியுரிமை சட்டதிருத்த விவகாரம்…!!! நெற்றிக்கண்ணை திறந்தார் மம்தா…!!! முடிந்தால் என் பிணத்தை தாண்டி கொண்டுவாருங்கள் என ஆவேசம்…!!!
- இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும், பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த மசோதா சட்டமானது.
- இந்தமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே.வங்க முதல்வர் ஆவேச கருத்து.
இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்கலான அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் டெல்லி, அலிகார் உள்ளிட்ட முக்கய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்க மாநிலத்திலும் போராட்டம் தலை விரித்து ஆடுகிறது. இந்த போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜி தனது கருத்தை ஆவேசமாக கூறியுள்ளார்,
அதில் அவர், நான் உயிருடன் இருக்கும் வரை இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், குடிமக்களின் தேசிய பதிவையும் நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்றும்,அதையும் மீறி அவர்கள் விரும்பினால் எங்கள் அரசை சட்ட பிரிவு 356 ஐ பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யலாம். ஆனால் அதற்க்காக நாங்கள் உங்களிடம் சரணடைய மாட்டோம். மேலும் கூறிய அவர், அதையும் மீறி கொண்டுவரவேண்டுமானால், என் பிணத்தை தாண்டிதான் அவர்கள் மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், குடிமக்களின் தேசிய பதிவையும் செயல்படுத்த முடியும் என்று சற்று ஆவேசமாக தெரிவித்தார். இதனால் பற்றி எரியும் மே.வங்கத்தில் மேலும் இந்ததகவலும் வேகமாக பரவி வருகிறது.