மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பெருமிதம் !
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கிரிசிடெக்ஸ் (CriSidEx) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜேட்லி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் முனைவோர் திறனை வெளிப்படுத்துவதோடு நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜேட்லி, கடந்த 3 ஆண்டுகளில் மாத ஊதியதாரர்களுக்கு ஏற்கெனவே பல சலுகைகளை அறிவித்துவிட்டதாகக் கூறினார். மாத ஊதியதாரர்கள் நேர்மையாக வரி செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். அரசு கருவூலத்தில் முதல் உரிமை ஏழைகளுக்கே எனக் கூறியுள்ள ஜேட்லி, மக்கள் பட்ஜெட்டை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.