இமாச்சல பிரதேசத்தில் பனி மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!
- வடமாநிலங்களில் தற்போது குளிர்காலம் நடைபெற்று வருகிறது.
- இயல்பை விட மிக அதிகமாக இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு பனிமழை காரணமாக கடும் குளிர்.
இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு , பனிமழை காரணமாக கடும் குளிர் காணப்பட்டது. இதனால் இமயமலைப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் வேளைக்கு பணியாட்கள் கிடைக்காமல் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடும் பனிபொழிவால் ஆங்காங்கே தீ மூட்டி மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். இதனிடையே நடுங்க வைக்கும் குளிரை கட்டுப்படுத்த முடியாமல் குளிருக்கு பழகிய மக்களே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் பல பகுதிகள் 0’டிகிரி வெப்ப நிலையை எட்டும் நிலையில் உள்ளன. அடுத்த சில நாட்களுக்கு இந்நிலையே நீடிக்கும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.