வியப்பில் மற்ற மாநிலங்கள்.!கேரளாவில் ஆளுங்கட்சி ,எதிர்கட்சி சேர்ந்து போராட்டம் .!

- குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- இன்று குடியுரிமை சட்டத்தையும் எதிர்த்து கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சியும், எதிர்கட்சியான காங்கிரஸ் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதனால் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் ஆரம்பித்து தற்போது பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அசாமில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் போராட்டத்தை அடக்க இராணுவ வீரர்கள் களமிறங்கினர். இதன் காரணமாக போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த போரட்டத்தில் பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் இறந்தனர்.
நேற்று டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள் .அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து இன்று குடியுரிமை சட்டத்தையும் எதிர்த்து கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சியும், எதிர்கட்சியான காங்கிரஸ் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக ஆளுங்கட்சியும் , எதிர்கட்சியும் சேர்ந்து போராட்டம் நடத்துவதை பார்த்து மாற்ற மாநிலங்கள் வியப்பில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025