மாயமான இந்திய சரக்குக் கப்பல் கடத்தப்பட்டதா ?

Default Image

22 இந்திய மாலுமிகளுடன்  மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டின் கடலோரப் பகுதியில், மாயமான சரக்குக் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

எம்டி மெரைன் எக்ஸ்பிரஸ் (MT Marine Express) என்ற சரக்குக் கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகும். சுமார் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள 13,500 டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்ற இந்த கப்பலில் இருந்த 22 மாலுமிகளும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்த கப்பல், மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் (Benin) என்ற நாட்டில், கினியா வளைகுடாவில் அமைந்துள்ள கொட்டோனு (Cotonou) என்ற துறைமுக நகரில் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு மாயமாகிவிட்டது. 48 மணி நேரமாக கப்பலை பற்றி எந்த தகவலும் இல்லாததால், மிரட்டிப் பணம் பறிப்பதற்காக அல்லது பெட்ரோலை கொள்ளையடிப்பதற்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்