தர்பார் படத்தை வட இந்தியாவில் வெளியிடுவதற்கு உரிமையை பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம்!
- தர்பார் படத்தை வட இந்தியாவில் வெளியிடும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
- இந்த படம் ஜனவரி 9-ம் தேதி திரையிடப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் தர்பார்.இந்த படம் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.
மேலும் இந்த படத்தின் ட்ரைலர் நாளை மாலை வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தை வட இந்தியாவில் வெளியிடுவதற்கான உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.மேலும் ஜனவரி 9-ம் தேதி திரையிடப்படும் என்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது
Proud to associate with @LycaProductions for its upcoming movie #Darbar, directed by @ARMurugadoss & starring Superstar #Rajinikanth. Unveiling the trailer tomorrow. #DarbarTrailer@rajinikanth @SunielVShetty #Nayanthara #AllirajahSubaskaran @Shibasishsarkar @divomovies pic.twitter.com/LZkKpoF6im
— Reliance Entertainment (@RelianceEnt) December 15, 2019