உன்னாவ் வழக்கு : இன்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

Default Image
  • உன்னாவில் இளம் பெண்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
  • இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பெயரில் குல்தீப் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.ஏற்கனவே புகார் கொடுக்க சென்ற அந்த பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டதாகவும், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர், அவரது தாய், உறவினர் பெண் ஆகியோர் சென்றபோது திடீரென லாரி மோதி அந்த பெண்ணின் தாயும், உறவின பெண்ணும் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் தீவிர சிகிச்சையில் பெற்று வந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க  உத்தரவு பிறப்பித்தது.மேலும் பாஜகவில் இருந்து குல்தீப் சிங் நீக்கப்பட்டார்.

மேலும் உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தும் உ.பி.யில் இருந்து டெல்லி  நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது .இதனை தொடர்ந்து 45 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.அப்பொழுது சிபிஐ தரப்பில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் அவரது கூட்டாளிகள் மீது குற்றாச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து இன்று டெல்லி நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்