குடியுரிமை பெறதா நபர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் – சுப்பிரமணியன் சுவாமி
- குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
- இந்திய குடியுரிமை பெறதா நபர்களை தேடி பிடித்து அவர்களை அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் இதற்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு தலைவரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இந்திய குடியுரிமை சட்ட பற்றி முழுமையாக தெரியாமல் எதிர் கட்சியினர் பேசி வருகின்றனர். இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் குடியுரிமை கேட்டு பதிவு செய்யலாம். திமுக அரசியல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
விரைவில் இந்திய குடியுரிமை பெறதா நபர்களை தேடி பிடித்து அவர்களை அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இலங்கை பிரபாகரன் இறப்புக்கு பிறகு அங்கு எந்த பிரச்சனையும் இல்லை. இஸ்லாமியர் நாடுகளில் இஸ்லாமியர்கள் மட்டும்தான் உயர் பொறுப்புக்கு வர முடியும்காஷ்மீர் பிரச்சனை குறித்து எதிர் கட்சிகள் அங்கு போராட்டம் செய்தால் கைது நடவடிக்கை செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால் டெல்லியில் கூட போராட்டம் செய்து இருக்கலாம் ஆனால் செய்ய வில்லை.அதே போல்தான் இந்த சட்டத்திற்கும் முடிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.