நோ சூடு…….சொரனை..! பொறுத்தது போதும் பொங்கி எழு…போருக்கு.! பஞ்ச் அடித்த நித்தி..!

Default Image
  • நோ சூடு,நோ சொரனை,நோ பாதர் யார் திட்டினாலும் அவர்களிடம் சீடர்கள் அன்பை காட்ட வேண்டும் என்று நித்தி கோரிக்கை  
  • பொறுத்தது போதும் பொங்கி எழு என்று தனது சீடர்களை ஞானப் போருக்கு நித்தியானந்தா வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

நித்தியானந்தா என்றால் சர்ச்சை- தான் என்றாகி விட்டது. எப்பொழுதும் அவரை சுற்றி சர்ச்சை ஏற்பட்டு கொண்டே வருகிறது.நித்தி எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு இங்கு யாரிடமும் பதில் இல்லை ஆனால் அவ்வபோது தனது சீடர்களிடம் மட்டும் வீடியோ மூலம் எங்கோ இருந்து பேசி வருகிறார்.இந்த வீடியோவில் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வரும் நித்தி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நித்தியின் இந்த வீடியோவிற்கு காரணம் தனது முன்னாள் சீடர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவலே ஆகும்.விஜய் நித்தியானந்தா தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்ற பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.இந்த குற்றச்சாட்டிற்கு நித்தி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே தற்போது நித்தி வெளியிட்டுள்ள வீடியோவில்  பேசுகையில் நோ சூடு,நோ சொரனை,நோ பாதர் என்ன திட்டினாலும் சீடர்கள்  அவர்களிடம் அன்பைக் காட்டுங்கள் அமைதியாக இருக்க வேண்டும் திட்டுபவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்.

Related image

யாரேனும் திட்டினால் அதனை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுங்கள் என்ன புரிகிறதா.பெரிய ஹீரோவெல்லாம் பஞ்ச் டயலாக் பேசினால் அவர்களின் ரசிகர்கள் விசில் அடிப்பார்கள். ரசிகர்களின் தேவைக்கேற்ப ஹீரோக்களும் பஞ்ச் டலயாக் பேசுவார்கள்.ஆனால் நான் பேசுவது தேவைக்காக இல்ல கடவுளின் அழுத்தத்தால் கேட்பவரின் விருப்பத்திற்க்காக பேசவில்லை சத்தியத்தின் சக்தியினால் பேசுகிறேன்.

பார்வையளர்களாக பயந்தாங்கொலிகள் ஓடி ஒலிந்து கொள்கின்றனர்.நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் சீடர்களே வென்றவருக்கும் இங்கு வரலாறு உண்டு தோற்றவருக்கு ஒரு வரலாறு உண்டு பார்த்து கொண்டிருக்கு பைத்தியங்களுக்கு ஒரு வரி கூட வரலாற்றில் இடம் கிடையாது.இறங்குங்கள் இந்த ஞானப்  போரில் வென்றாலும், தோற்றாலும் கைலசம் உண்டு பொறுத்தது போதும் பொங்கி எழு என்று வீடியோ மூலம் தெரிவித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்