10 வயது சிறுமையை கம்பியால் அடித்து கொன்ற 12 வயது சிறுமி! ஒரு பேனாவால் நடந்த விபரீதம்!
- பள்ளியில் பேனாவை எடுத்து சென்றதற்காக 10 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டு கம்பியால் தாக்கி 12 வயது சிறுமி கொலை செய்துவிட்டார்.
- அதனை மறைக்க 12 வயது சிறுமியின் பெற்றோர் முயற்சி செய்ததால் அவர்களும் தற்போது கம்பி எண்ணுகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் பயின்று வருகிறார் 12 வயதான ரேஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) எனும் சிறுமி. இதே பள்ளியில் ஒரு 10 வயது நிரம்பிய சிறுமியும் படித்து வந்துள்ளார். அந்த 10 வயது சிறுமி, ரேஷ்மாவின் பேனாவை எடுத்து தன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனை அறிந்த ரேஷ்மா, அந்த 10 வயது சிறுமி வீட்டிற்கு பள்ளி முடிந்ததும் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் சண்டை எழுந்துள்ளது. அந்த 10 வயது சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லை. அதனால் இவர்களது சண்டை யாருக்கும் தெரியவில்லை. அச்சண்டையில் ஒரு கம்பியை எடுத்து ரேஷ்மா, 10 வயது சிறுமியை தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துய்விட்டார் என தெரிகிறது.
உடனே தன் வீட்டிற்கு ஓடி வந்து நடந்ததை தாயாரிடம் கூறியுள்ளார். அடுத்து, ரேஷ்மா தயார் அச்சிறுமி வீட்டிற்கு சென்று அந்த சிறுமி உடலை எடுத்து, தன் வீட்டருகே உள்ள ஒரு கால்வாயில் வீசியுள்ளார். இந்த தகவலை தன் கணவரிடம், ரேஷ்மா தயார் கூறியுள்ளார். உடனே ரேஷ்மா தந்தை கால்வாயில் இருந்த அச்சிறுமியின் உடலை கைப்பற்றி ஒரு மறைவான இடத்தில் புதைத்துவிட்டார்.
இதற்கிடையில் தன் மகளை காணவில்லை என கூறி, போலீசில் அச்சிறுமியின் பெற்றோர்கள் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பள்ளியில் நடைபெற்ற பேனா சண்டை தெரியந்துள்ளது. இது குறித்து விசாரிக்கையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. அதற்கடுத்து ரேஷ்மா, ரேஷ்மா தந்தை, தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.