சரணம் என்றால் என்ன பொருள்…!!! ஐயப்ப பக்தர்கள் அறிய வேண்டிய அழகான தகவல்…!!!!
- கார்த்திகை மாதத்தில் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐய்யப்ப கோஷமான சரணம் ஐயப்பா என முழங்குவார்கள்.
- இந்த சரணம் என்னவென்றால், இதற்க்கு மிகவும் மந்திரத்தன்மை மிகுந்த சொற்களாகும்,இது குறித்த சிறப்பு தகவல்கள்.
ஐயப்ப பக்தர்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை அவர்களின் நாவில் உச்சரிக்கும் சொற்களில் அதிகம் வருவது சரணம் ஐயப்பா என்ற கோஷம் என்பதாகும். இந்த சரணம் என்ற சொல் மிகுந்த மந்திரத்தன்மை வாய்ந்தது ஆகும். இதன் பொருள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். இந்த சரணம் என்ற சொல்லுக்கு பொருள் என்பது, ‘ச’ என்றால் காமம் அகற்றல் என்பதும், ‘ர’ என்றால், உலக வாழ்வு நிலையற்றது என்ற அறிவை தருவது என்றும், ‘ண்’ என்றால்,அமைதியை தருவது என்றும், ‘ம்’ என்றால் மகிழ்ச்சியை தருவது என்றும் பொருள் கொள்ளுபவை ஆகும். இந்த பொருளை உணர்த்தவே மாலை அணிந்து விரதமிருந்து சரணம் கோஷமிடுகின்றனர். இந்த அறிவை எப்போதும் நினைவில் வைத்து இதன் படி வாழ்வை வசந்தமாக்கலாம்.