அதென்ன கார்த்திகையில் மட்டும் மாலை போடுகின்றனர்…!!! அலசலாம் அரிஹரனை பற்றிய சிறப்பு தகவல்கள்…!!!

Default Image
  • ஐயப்பன் என்றாலே கார்த்திகை மாதம் மாலை அணிந்து மலைக்கு செல்லவர்.
  • அவர்கள் ஏன் கார்த்திகை மாதம் மாலை அணிகின்றனர் என்ற வினாவிற்கான விடை அறியலாம் வாருங்கள்.

சபரி மலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்தை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற எண்ணம் அனைவருக்கும் எழும். இந்த எண்ணத்தை தெளிவு படுத்தவே இந்த சிறப்பு தொகுப்பு. கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த மாதம் ஒளியின் மாதம் என்றே அழைக்கலாம். ஏணென்றல் இந்த மாதத்தில் தான் பரம்பொருளான சுந்தரேஸ்வரனான சிவபெருமான் உலகிற்கு வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாக காட்சி அளித்தார்.

Related image

இந்த நெருப்புப்பிளம்பையே நாம் அனைவரும் திருவண்ணாமலை தீபமாக தரிசனம் செய்கிறோம். இதே போல் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பிளம்மிலிருந்து தமிழ்கடவுளான முருகன் அவதரித்தார், அவரை இந்த கார்த்திகை பெண்களே வளர்த்தனர்  என்பதும் புராணம். இதே போல் சபரிமலை சாஸ்தாவும் ஒளி வடிவில் காட்சி தருபவர் ஆவர். எனவே ஒளியை அடிப்படையாக கொண்ட மாதம் என்பதாலும் ஒரு காலத்தில் கார்த்திகை நட்சத்திரமே  முதல் நட்சதிரமாக இருந்ததாலும் இம்மாதத்தில் ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் இம்மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு செல்கின்றனர். இதுவே பக்தர்கள் கார்த்திகை மாதத்தை மாலை அணிய தேர்ந்தெடுப்பதற்கான காரணமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்