INDvsWI: டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி ! இந்தியா முதலில் பேட்டிங்
- முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இந்த நிலையில் இன்று 3 போட்டிகள் ஒருநாள் தொடர் தொடங்குகிறது .முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விவரம் :
ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன் ), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே , ஜாதவ், ஜடேஜா , குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்:
ஷாய் ஹோப்,சுனில் அம்ரிஸ், ஷிம்ரான் ஹெட்மியர்,நிக்கோலஸ் பூரன்,ரோஸ்டன் சேஸ், பொல்லார்ட்(கேப்டன்),ஜேசன் ஹோல்டர்கீமியோ பால்,வால்ஷ் ,ஜோசப் ,ஷெல்டன் கோட்ரெல் ஆகியோர் இடம்பெற்றனர்.