உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உடன் பிறப்புகளிடமே 10 இலட்சம் கேட்ட திமுக மா.தலைமை.!!! புகார் கடிதம் இணையத்தில் வெளியாகி அம்பலம்..!!!

Default Image
  • தற்போது உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்காக  வேட்பு மனு தாக்கல் நடைபெற்றுவருகிறது.
  • தற்போது ஆண்ட கட்சியில் பல லட்சம் கேட்டு வசமாக மாட்டிக்கொண்ட அவலம்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கிய தமிழகத்தினை ஆண்ட  கட்சி  நடக்க இருக்கும் ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு அந்த கட்சி சார்பில்  போட்டியிட தேர்தல் செலவுகளுக்கு மற்றும் மேற்படி செலவுகளுக்கு என மொத்தம்   ரூ 10,00,000/-. முதல் ரூ 15,00,000/-.  வரை வைத்திருப்பவர்களுக்கு  மட்டுமே சீட் வழங்குவதக  சலசலப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த செய்தி தற்போது நிரூபணமாகி உள்ளது. இந்த பதறவைக்கும் செய்தி  புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தில்  பகிரங்கமாகவே அரங்கேரியுள்ளது.

Image result for dmk anna arivalayam

இதில் புதுக்கோட்டை மாவட்ட  முன்னால்  சட்ட மன்ற உறுப்பினரான ஆலவயல் சுப்பையா, அந்த கட்சியின்  தெற்கு மாவட்ட செயலாளரான  சட்டமன்ற உறுப்பினரான ரகுபதி மீது கட்சி தலைமைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய  புகார் மனுவில், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியின்  12- வது வார்டு பகுதியில்  போட்டியிட எனது மகனான  முரளிதரன் விருப்ப மனு கொடுத்திருந்தார்.

Image result for indian money

இதன் காரணமாக நேர்காணல் முடிக்கப்பட்டு சீட் ஒதுக்கும் நிலையில் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  ரகுபதி  என் மகனிடம் ரூ 10 லட்சம் ரூபாய் கேட்டார் என்றும், அந்த தொகையை  கொடுத்தால் மட்டுமே  சீட் என்றும், மேலும்  மற்ற தேர்தல் செலவை நீங்களே ஏற்க வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்துள்ளதாகவும், அதனால் கட்சித் தலைமை தான் முன்வந்து  எனது மகனுக்கு சீட் ஒதுக்கித் தர வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.மேலும் இந்த கடிதத்தை  சமூக வலைதளங்களிலும் பரப்பிவிடப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த  மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  ரகுபதி, ரூ 10 லட்ச ரூபாய்  கேட்கவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை என்றும், அந்த புகார் அவதூறானது என்று குறிப்பிட்டார். இது குறித்து உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு  அவர்கள் மீது கட்சி  தகுந்த நடவடிக்கை எடுக்கும் திமுக தரப்பில்  கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli
annamalai BJP