12 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்-ஐசியூவில் மகளிர் ஆணைய தலைவி மலிவாலுக்கு தீவிர சிகிச்சை..!

- மகளிர் ஆணைய தலைவி மலிவால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கற்பலிப்பு வழக்குகளில் 6 மாதத்தில் மரண தண்டனை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கற்பலிப்பு வழக்குகளில் 6 மாதத்தில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற திசா மசோதாவை வலியுறுத்தில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்து வருகின்றன மேலும் இது தொடர்பான வழக்குகளை 6 மாதக் காலத்தில் விசாரித்து குற்றவாளிகளூக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் திசா மசோதாவை நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து உண்ணாவிரத்தினை மேற்கொண்டு வந்தார்.இந்த போராட்டம் ஆனது கடந்த 3 ந் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.12 நாட்களாக தொடர் உண்னாவிரதத்தில் ஈடுபட்டு வரும் அவர் 13 வது நாளான இன்று உண்ணாவிரத்தினை மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென அதிகாலையில் சுவாதி மலிவால் மயக்கம் அடைந்தார்.
போராட்டத்தை மேற்கொண்டு வந்த அவரை இதற்கு முன் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தால் 7 முதல் 8 கிலோ வரை எடையானது குறைந்து விட்டது.இதற்கு மேலும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டால் அது அவருடைய உடல் நலத்தை பாதிக்கும் என்று அறிவுறை கூறினார்.
மருத்துவரின் இந்த ஆலோசனைகளை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தில் கவனம் செலுத்தி வந்த மலிவால் இன்று அதிகாலை சுயநினைவை இழந்து மயக்கமடைந்தார்.அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த பெண்போராளி மீண்டும் வர அனைவரும் பிராத்திப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?
March 13, 2025