உள்ளாட்சி தேர்தல்.! அதிமுக 2-வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.!
- நேற்று முன்தினம் அ.தி.மு.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 7 மாவட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
- நேற்று இரவு அ.தி.மு.க. 10 மாவட்டங்கள் கொண்ட 2-வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் வருகின்ற 27 , 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அ.தி.மு.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய 7 மாவட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. 2-வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.அதில் 10 மாவட்டங்களுக்கு இடம்பெற்று உள்ளனர்.அதில் திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், பெரம்பலூர், தஞ்சை, நாகை, சிவகங்கை, தூத்துக்குடி தெற்கு ஆகிய 10 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
வேட்புமனு தாக்கல் நாளை முடிய உள்ள நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.