இந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடித்துவிட்டதால் பாலிவுட் வாய்ப்பிற்கு ‘நோ’ கூறிய சமந்தா!
- தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.
- இவர் முதன்மை வேடத்தில் நடித்திருந்த ஓ பேபி திரைப்படம் பலத்த வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுவிட்டது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு இருந்தார். இருந்தாலும் படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தவில்லை.
அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை கொடுத்து தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ஓ பேபி திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. தற்போது இப்படத்தை பாலிவுட்டில் தயாராக்க பாலிவுட் படக்குழுவினர் சமந்தாவை அணுகினர்.
ஆனால், தனக்கு தென்னிந்தியாவில் அதிக படங்கள் கைவசம் இருப்பதாகவும் மேலும், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து விட்டதால் மீண்டும் நடிக்க விருப்பமில்லை எனவும் கூறி பாலிவுட் வாய்ப்பை சமந்தா நிராகரித்து விட்டாராம். அதனல் டாப்ஸியிடம் பாலிவுட் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.