கோவில் சொத்து குல நாசம் காரணம் சண்டிகேஸ்வர_ரா..? கை தட்ட காரணம்.?அறிந்ததுண்டா..? வாருங்கள் அறிந்து கொள்வோம்

- சண்டிகேஸ்வரர் சன்னிதியில் ஏன் கை தட்டுகிறோம் என்று அறிந்து கொள்வோம்.
- கை தட்டி வழிபட்டால் கேட்ட வரம் நிச்சயாக கிடைக்கும் ஆனால் ஏன் கை தட்டுகிறோம் என்ற காரணத்தையும் சண்டிகேஸ்வரர் பற்றிய கூடுதல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
கோவில்களில் சிவாலய வழிபாட்டில் நாம் நிறைவாப் பதிவு செய்து கொண்டுவர வேண்டிய இடம் சண்டிகேஷ்வரர் சன்னிதி அங்கு பக்தர்கள் கைத் தாளமிடுவதும்,விரல்களை சொடுக்குவதுமான செயல்களை செய்வார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக உள்ளது.
எதற்கு இவ்வாறு செய்கிறோம் சண்டிகேஸ்வரர் 24 மணி நேரமும் சிவ பூஜையிலேயே தனது கவனத்தைச் செலுத்தி யோக நிலையில் அமர்ந்திருப்பவர்.
சிவன் ஒருவரை நினைத்தே வாழ்பவர்.அவர் சன்னிதியில் கைத்தட்டி வணங்குவதை கவியரசு கண்ணதாசன் அழகாக சொல்லி இருப்பார்.சிவன் சொத்துக்களில் நாம் எதையும் கொண்டு செல்லவில்லை என்பதை நிருபணம் செய்வதற்காகத் தான் கைதட்டுவதாகக் கூறுவார். ஏன் எப்படி கவியரசு கூறினார் என்றால் சண்டிகேஸ்வரர் தான் சிவன் ஆலத்தில் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதாகவும் அவற்றை நிர்வாகிப்பதாகவும் ஒரு ஐதீகம் உள்ளது.
சண்டிகேஸ்வரர் சன்னிதியில் நாம் அவரை வழிபட்டு சிவ தரிசனத்தின் முழுப்பலனையும் தரும் படி சொல்லி தரிசிக்க வேண்டும்.மூன்று முறை மொதுவான சப்தத்துடன் கைத்தட்டி வழிபடல் வேண்டும் காரணம் 24 மணி நேரமும் சிவ பூஜையில் ஆழ்ந்திருப்பவர்.அவ்வாறு கைத்தட்டி நமக்கு தேவையானதைக் உடனே கேட்டால் கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார்.நாம் கோவில் வழிபாடு செய்வதையும் உடன் பதிவு செய்து கொள்வார்.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சிவ ஆலயங்களுக்கு கணக்குபிள்ளை இவர்தான் இவரைத் தாண்டி ஒரு துரும்பும் கோவிலை விட்டு செல்லது,வரவும் முடியாது.மேலும் இவரே சிவன் சொத்தை நிர்வாகம் செய்பவர் என்று மேலே குறிப்பிட்டோம் அதனால் தான் என்னவோ இதற்காக சொல்லி வைத்தார் போல ஒரு பழமொழி நம் நினைவிற்கு வரும் கோவில் சொத்து குல நாசம் என்று கூறுவது சண்டிகேஸ்வரை வைத்து தான் என்ற பேச்சும் வழக்கில் உள்ளது.மேலும் உன்னதமான வாழ்வளிக்கும் யோக நிலையிலே அமர்ந்து அருள் புரியும் சண்டிகேஸ்வரரை வழிபட்டு வளங்களை பெறுவோம்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025