அப்பனைப் போல அப்பன்..இதென்ன அப்பனைப் போல அப்பனா… வாருங்கள் விளங்களாம்..!!!

Default Image
  • அப்பனைப் போல அப்பன் என்பது  புதிதானது ஒன்றும் இல்லை. இந்த சிறப்பு செய்தி நம் முதன்மை கடவுளான பிள்ளையார் அப்பனைக் குறித்ததாகும்.
  • இந்த வித்தியாசமான விநாயகரைப் பற்றிய செய்தி குறித்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் புனே மற்றும் நாசிக் சாலையில் ஜின்னர் என்ற பகுதியில் உள்ளது இந்த  வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயம். இந்த முதன்மை கடவுளான பிள்ளையாரப்பன் சற்று வித்தியாசமான பிள்ளையாரப்பன் ஆவார். இவர் தனது தந்தை பரமேஸ்வரனை போலவே இவரும் தோற்றத்தில் அதாவது நெற்றிக்கண் கொண்டு அருள்பாளித்துவருகிறார். இந்த விநாயகரின் விக்ரகத்தில்  புருவத்தின் மத்தியில் ஒரே ஒரு கண் மட்டுமே கொண்டு காட்சி அளிக்கிறார். இந்த பிள்ளையாரை இப்பகுதி மக்கள் ”நெற்றிக்கண் பிள்ளையார் என்றே அழைக்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலையம் மலைமேல் காணப்படுகிறது. இந்த, மலைமேல் அருள்பாளிக்கும் இந்த விநாயகரை இப்பகுதி மக்கள் ” கிரிஜாத் மத் கண்பதி” என்றும் செல்லமாக அழைக்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க இந்த விநாயகரை வணங்கினால் இவரது தந்தையான பரமேஸ்வரனையும் வணங்கும் பாக்கியம் கிடைக்கும் என்று இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த அப்பனை போல உள்ள பிள்ளையாரப்பனை பற்றிய இந்த அதிசய செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்