உள்ளாட்சித் தேர்தல் : திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
- தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
- உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.கடந்த 9 தேதி முதல் தொடங்கி ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
’தலைமைக் கழக அறிவிப்பு’
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை, அந்தந்த மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெறுகிறது.
தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியல்:#DMK pic.twitter.com/cbwqMc7Hxc
— DMK (@arivalayam) December 14, 2019
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .திமுக கட்சி ரீதியிலான 14 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை முடிந்ததும் பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி திமுக தலைமை தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்தி, சேலம் மேற்கு,கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.