பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்,என்னால் மன்னிப்பு கேட்க முடியாது – ராகுல் உறுதி
- ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என்று கூறிய விவகாரத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் ராகுல் சவர்க்கர் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகள் குறித்து ஜார்கண்டில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நாட்டின் பிரதமரான மோடி எங்கு போனாலும் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பேசி வருகிறார்,ஆனால் நாட்டில் பல இடங்களில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் அரங்கேறி ரேப் இன் இந்தியாவாக மாறி வருகிறது என்று பேசினார்.ராகுல் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதன் பின்பு செய்தியாளர்களிடம் ராகுல் பேசுகையில் ,என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்தார்.மேலும் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் வீடியோ ஒன்றை பதிவிட்டு ,இதற்கு எல்லாம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதிவிட்டு,
- வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வன்முறைகள் தொடர்பாக
- இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்ததற்காக
- இவ்வாறு பேசியதற்காக என்று ராகுல் பதிவிட்டார்.
Modi should apologise.
1. For burning the North East.
2. For destroying India’s economy.
3. For this speech, a clip of which I’m attaching. pic.twitter.com/KgPU8dpmrE
— Rahul Gandhi (@RahulGandhi) December 13, 2019
ராகுல் இவ்வாறு பேசியதற்காக என்ற கூறியதில் ஒரு விடியோவை பதிவிட்டார்.அந்த வீடியோவில் மோடி பேசுகையில்,டெல்லி நகரை பாலியல் தலைநகரம் ( ரேப் கேப்பிட்டல் ) என்று கூறிய வீடீயோவை வெளியிட்டார். பின்னர் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று பாரதத்தை காப்போம் என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைமையிலான பேரணி தொடக்கப்பட்டது.அப்போது நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துவிட்டது என பேசியதற்காக மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்கள். நான் கேட்க மாட்டேன். மாறாக பாலியல் வன்கொடுமைகளை தடுக்கதாதற்காக பிரதமர் நரேந்திர மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் ராகுல் சவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.
நாட்டின் எல்லா நிதியும் அம்பானி மற்றும் அதானியின் பாக்கெட்டுக்கு செல்கிறது.மோடி என்ற தனி நபரால் இந்தியாவின் பொருளாதாரமே சரிந்துள்ளது.ஏழைகளின் பணத்தை திருடுகிறார் மோடி.நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம் என்று பேசினார்.